பொது செய்தி

தமிழ்நாடு

முருகனை தரிசித்த பக்தர்கள்: தைப்பூசம் கோலாகலம்

Added : பிப் 09, 2020
Advertisement

சேலம்: முருகன் கோவில்களில், கோலாகலமாக நடந்த தைப்பூச விழாவில், திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தைப்பூசத்தையொட்டி, சேலம், ஜங்ஷன், காவடி பழநியாண்டவர் கோவிலில், மூலவருக்கு, பல்வேறு அபி ?ஷகம், ஆராதனை செய்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். காவடி எடுத்து, முடி காணிக்கை செலுத்தி, பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். குறிப்பாக, பன்னீர், புஷ்ப, பால் உள்பட பல காவடிகளை தோளில் சுமந்து, மேள, தாளத்துக்கேற்ப நடனமாடி வந்து, முருகன் வைபவத்தை வெளிப்படுத்தி, தரிசனம் செய்தனர். குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், உற்சவர் சுவாமி, விஸ்வரூப ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பேர்லாண்ட்ஸ் முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன், மூலவர் ஞான சுப்ரமணிய சுவாமிக்கு அபி ?ஷக, ஆராதனை செய்து, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

வடசென்னிமலையில்...: ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்ரமணியருக்கு, பல்வேறு அபிஷேக பூஜை நடந்தது. தங்கம், வெள்ளி கவசத்துடன், விபூதியுடன் ராஜ அலங்காரத்தில், மூலவர் பாலசுப்ரமணியர் அருள்பாலித்தார். ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, வெள்ளை விநாயகர் வளாகத்தில், மூலவர் பாலசுப்ரமணிய முருகன் வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ண புரீஸ்வரர், கெங்கவல்லி அருகே, வீரகனூர் குமரன் மலை பாலதண்டாயுதபாணி, வரகூர் கரடு முருகன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

இடைப்பாடியில்...: இடைப்பாடி பாலமுருகன்; கவுண்டம்பட்டி முத்துக்குமார சுவாமிக்கு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பூஜை நடந்தது. கல்லபாளையம், ஞானகந்தசாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. மகுடஞ்சாவடி, சுப்ரமணியர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அங்குள்ள மாரியம்மன் கோவிலிலிருந்து, திரளான பக்தர்கள், காவடி ஆட்டத்துடன் கோவிலை அடைந்தனர். சங்ககிரி, அக்கம்மாபேட்டை சுப்ரமணியர் கோவில் வளாகத்தில் தொடங்கிய காவடி ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. அதேபோல், அனைத்து முருகன் கோவில்களில், அரோகரா கோஷத்துடன், தைப்பூச விழா, வெகு விமரிசையாக நடந்தது.

ஜோதி தரிசனம்: வள்ளலார் சித்தியடைந்த திருநாளான தைப்பூச தினத்தில், ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், சித்தன் வீதியிலுள்ள திருவருட்பிரகாச வள்ளலார் மடத்தில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், நேற்று, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன், ஏழாமாண்டு அன்னதான விழா நடந்தது. அதில், 1,000க்கும் மேற்பட்டோருக்கு, உணவு பரிமாறப்பட்டது. சங்ககிரி, புது பஸ் ஸ்டாண்ட், ஆஞ்சநேயர் நகரிலுள்ள, சுத்த சமரச சன்மார்க்க சங்கத்தில், ஜோதி தரிசனம் நேற்று நடந்தது. அதில், வள்ளலார் படத்துக்கு அலங்காரம் செய்து, ஜோதி விளக்கேற்றி வழிபாடு நடந்தது. அப்போது, வள்ளலார் பாடல்களை பாடி பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. அதேபோல், தலைவாசல், வடகுமரை, சத்தியஞானசபையில், ஜோதி தரிசனம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X