பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூரில் சாக்கர் கெளுத்தி மீன்கள் அதிகரிப்பு: வலைகள் சேதமாவதால் மீனவர்கள் அலறல்

Added : பிப் 09, 2020
Advertisement

மேட்டூர்: மேட்டூரில், சாக்கர் கெளுத்தி மீன்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், வலைகளில் சிக்குவதால், மீனவர்கள் சோகமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. அதில், மீன்வளத்துறை உரிமம் பெற்று, 1,500 பேர் மீன்பிடிக்கின்றனர். அணையில், மீன் உற்பத்தியை அதிகரிக்க, ஆண்டுதோறும், 45 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட நன்னீர் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன. அந்த மீன்குஞ்சுகள் வளர்ச்சி அடைவதற்குள், பல மீனவர்கள், சிறு ஆயவலை பயன்படுத்தி, பிடித்துவிடுகின்றனர். அதற்கேற்ப, கட்லா, ரோகு, மிர்கால் இன மீன்களின் உற்பத்தி குறையும் நிலையில், சில ஆண்டாக, அமெரிக்காவை தாயகமாக கொண்ட, 'டேங்க் கிளீனர்' எனும் சாக்கர் கெளுத்தி மீன்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தமிழக எல்லை, பாலாறு வனத்தில், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், ஒரு மாதமாக, சாக்கர் கெளுத்தி மீன்கள் அதிகளவில் பிடிபடுவதால், மீனவர்கள் சோகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியில், ஆறு மாதமாக குடும்பத்துடன் தங்கி மீன் பிடிக்கும், மீனவர் தம்பி, 60, கூறியதாவது: இரு ஆண்டாகத்தான், சாக்கர் கெளுத்தி மீன்கள் அதிகளவில் பிடிபடுகின்றன. கடந்தாண்டை விட, நடப்பாண்டு, இந்த மீன்கள் பெருகியதால், தினமும் சராசரியாக, 50 கிலோ வரை வலையில் சிக்குகின்றன. இந்த மீனின் தோலில், முட்கள் இருப்பதால், வலையில் எளிதாக சிக்குகின்றன. பிடிபட்ட மீன்களை, வலையை கிழித்துதான் விடுவிக்க முடியும். இதனால், வலைகள் சேதமாவதால், தொழிலும் பாதிக்கிறது. இந்த மீன்களை, சமைக்க முடியாது என்பதால் யாரும் வாங்குவதில்லை. இதனால், பிடிபடும் மீன்களை, அப்படியே கரையில் கொட்டி விடுகிறோம். இந்த மீன்களின் உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரிப்பதால், அதற்கு பயந்து, எதிர்காலத்தில், மேட்டூர் அணையில் மீனவர்கள், மீன்களை பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X