சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் ஷோரூம் மேலாளரிடம் மோசடி: வெளிமாநில மர்ம நபர்களுக்கு வலை

Added : பிப் 09, 2020
Advertisement

ஓமலூர்: பைக் ?ஷாரூம் மேலாளரிடம், நூதன முறையில், பணத்தை பறித்து விட்டு தலைமறைவான, வெளிமாநில, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காடையாம்பட்டி, தும்பிப்பாடியைச் சேர்ந்தவர் முழுமதி, 34; ஓமலூரிலுள்ள பைக் ?ஷாரூமில் மேலாளராக பணிபுரிகிறார். ?ஷாரூம் அருகே, முட்டை கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர், அந்த கடைக்கு சென்று, 50 ரூபாய்க்கு, அங்கிருந்த பெண்ணிடம், முட்டை வாங்கினர். அதற்காக, வெளிநாட்டு கரன்ஸி நோட்டுகளை, பெண்ணிடம் கொடுத்தனர். அவர், இது செல்லாது எனக்கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ?ஷாரூமிலிருந்து வெளியே வந்த முழுமதி, வாக்குவாதம் நடப்பதை கண்டு, அங்கு சென்று விசாரித்தார். அப்போது, அந்த நபர்கள், இந்திய ரூபாய்க்கு மாற்றாக, இரட்டிப்பு வெளிநாட்டு கரன்ஸி நோட்டு தருகிறோம் என கூறியுள்ளார். அதற்காக, முழுமதி தான் வைத்திருந்த, 3,500 ரூபாயை எடுத்து வைத்தார். ஆனால், வெளிநாட்டு கரன்ஸி வழங்காமல் முழுமதி வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு மர்மநபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை முழுமதி உணர்ந்தார். பின், அவர் புகார்படி, மர்ம நபர்கள் குறித்து, ஓமலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X