பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : பிப் 09, 2020
Advertisement

அகற்றிய தொட்டி நீருக்கு தவிப்பு: தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி நுழைவுவாயில் முன்புள்ள கணேசா காலனியில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. மாணவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இது, மூன்று மாதத்துக்கு முன் அகற்றப்பட்டது. இதனால், தண்ணீருக்கு மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மாணவர்களின் நலன்கருதி, அகற்றப்பட்ட தண்ணீர் தொட்டியை, மீண்டும் அமைக்க வேண்டும்.
சேதமான சாலை சீரமைக்கப்படுமா? தர்மபுரி நகராட்சி, 19வது வார்டு மண்டப தெருவில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஒரு தனியார் பள்ளி உள்பட, ஏராளமான கடைகளும் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில், சிமென்ட் தரைதளம் கொண்ட சாலை அமைக்கப்பட்டது. தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமான நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுகாதார வளாகம் திறக்கணும்: மொரப்பூர் அடுத்த சிந்தல்பாடி பஞ்., தொங்கனூரில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடந்த, 2013 - 14ல், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், சுகாதார வளாகத்தை திறக்காததால், தற்போது, பயன்பாடின்றி பூட்டியுள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X