பொது செய்தி

தமிழ்நாடு

118 தற்காலிக பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை

Added : பிப் 09, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுனர்களாக பணியாற்றிய, 118 பேருக்கு பணி நியமன ஆணைகளை, அமைச்சர் அன்பழகன் வழங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, வாரிசு பணி வழங்கும் நிகழ்ச்சி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். இதில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஏழு பேருக்கு வாரிசு வேலைக்கான நியமனம் மற்றும், தற்காலிக ஓட்டுனர்களாக பணியாற்றிய, 111 பேருக்கு, நிரந்தர பணிக்கான நியமன ஆணை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக, தர்மபுரி மண்டல பொதுமேலாளர் ஜீவரத்தினம், துணை மேலாளர்கள் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X