பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Added : பிப் 09, 2020
Advertisement

தர்மபுரி: தைப் பூசத்தை முன்னிட்டு, தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தர்மபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள, சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, கடந்த, 4 காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அன்று பகல், 1:00 மணிக்கு ஆட்டுகிடா வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. 5 இரவு, 9:00 மணிக்கு புலி வாகனம், 6 இரவு, 8:00 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, நாக வாகன உற்சவமும், நேற்று காலை, 10:00 மணிக்கு பால்குடம், பூக்காவடிகள் ஊர்வலம் மற்றும் அலகு குத்துதல் ஆகியவை நடந்தன. இரவு, 9:00 மணிக்கு மேல், சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பொன்மயில் வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் ரத ஊர்வலம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, பெண்கள் மட்டுமே வடம்பிடித்து தேர் இழுக்கும் மஹாரத தேர் இழுத்தல் நிகழ்ச்சி, நாளை காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் பிச்சாண்டவர் உற்சவம், வேடர்பறி குதிரை வாகனமும், 12ல் பூப்பல்லக்கு உற்சவம், 13ல் சயன உற்சவம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X