சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்டியல் கொள்ளையை தடுக்க முயன்ற கோவில் காவலாளியை கொல்ல முயற்சி

Added : பிப் 09, 2020
Advertisement

பாலக்கோடு: கோவில் உண்டியல் கொள்ளையை தடுத்த காவலாளியை, கொல்ல முயன்றவர்க?ளை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, காணிக்கையை உண்டியலில் செலுத்துவது வழக்கம். கடந்த பொங்கலன்று, இக்கோவிலில் நடந்த விழாவில், பாலக்கோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். இன்று வரை கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதையறிந்த மர்ம நபர்கள் மூவர், நேற்று முன்தினம் இரவு, உண்டியலை உடைத்து, காணிக்கையை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு, கோவில் காவலாளி சஞ்சீவன், 53, அவர்களை பிடிக்க முயன்று, சத்தம் போட்டுள்ளார். ஆத்திரமடைந்த மர்மநபர்கள், பெரிய பாறாங்கல்லை அவர் மீது வீசி விட்டு தப்பிச்சென்றனர். அவரது சத்தம் கேட்டு கோவிலுக்கு வந்த அப்பகுதியினர், படுகாயமடைந்த சஞ்சீவனை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாண்டிமாதேவி விசாரிக்கிறார். இக்கோவிலில், பக்தர்கள் அதிக காணிக்கையை செலுத்தி வருவதால், ஹிந்து சமய அறநிலையத் துறையினர், கோவிலில் கண்காணிப்பு கேமரா மற்றும் அபாய எச்சரிக்கை மணி அமைக்க, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X