சனத்குமார் நதியில் கலக்கும் சாக்கடை நீர்: நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

Added : பிப் 09, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரியின் முக்கிய நதியாக சனத்குமார் நதி உள்ளது. இதை பாதுகாக்க, தர்மபுரி நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஆர்வம் காட்டாமல் உள்ளது. இதனால், இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட செந்தில்நகர், இலக்கியம்பட்டி மற்றும் அதையொட்டிய பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் நேரடியாக, இந்நதியில் கலக்கிறது. இதேபோன்று, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரத்தில் உள்ள, குடியிருப்புகள் மற்றும் தறிக்கூடங்களில் இருந்தும், குப்பாகவுண்டர் தெரு, மதிகோண்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும், இந்நதியில் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது. இதனால், இப்பகுதிகளின் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள, ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில், சாக்கடை நீர் கலந்து வருவதாக, பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி காந்திசிலையிலிருந்து, அன்னசாகரம் பிரிவு சாலை அருகே, சமீபத்தில் சாலை விரிவாக்க பணி மற்றும் சாலையோரத்தில், கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இக்கால்வாய், சனத்குமார் நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சனத்குமார் நதியில் மேலும் சாக்கடை நீர் அதிகளவில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக, இப்பகுதியினர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சாக்கடை நீர், நதியில் நேரடியாக கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு மையம் அமைக்க, நகர பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X