பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : பிப் 09, 2020
Advertisement

சாலை சேதத்தால் விபத்து வாய்ப்பு: கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரில் உள்ள எட்டு தெருக்களில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது பல தெருக்களில், கற்கள் பெயர்ந்து சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஏழு மற்றும் எட்டாவது கிராசில் முற்றிலும் கற்கள் பெயர்ந்துள்ளன. இங்கு, உடனே புதிய சாலை அமைக்க வேண்டும்.
சாலையில் ஓடும் கழிவுநீரால் பாதிப்பு: காவேரிப்பட்டணம் சாப்பரம் சாலையில், கொசமேட்டில் இருந்து அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையில், கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் ஓடுகிறது. இதனால், மாணவியர் மற்றும் மக்கள் சிரமப்படுகின்றனர். இங்கு கடந்த, 20 ஆண்டிற்கும் மேலாக சாலை வசதியின்றி மக்கள் அவதிப்படும் நிலையில், தற்போது சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஓடுகிறது. தொற்று நோய் பரவும் முன், சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X