பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை நிறுத்த தீர்மானம்

Added : பிப் 09, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: தனியார் பள்ளிகளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என, ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, வட்டார கிளை செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. கிளை தலைவர் ஹென்றி பவுல் தலைமை வகித்தார். கூட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு செய்வது, அரசு பள்ளியை பாதிப்பு அடைய செய்கிறது. எனவே, ஒவ்வோர் ஆண்டும், 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்வதை தவிர்த்து, அத்தொகையில், மாவட்டத்துக்கு ஒரு பள்ளியை சர்வதேச தரத்துக்கு மாற்ற வேண்டும். கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 24 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் நிலையில், அங்குள்ள உபரி ஆசிரியர்களை, கிருஷ்ணகிரி ஒன்றியத்திலேயே பணியமர்த்த வேண்டும். சிறுபான்மை மொழி காலி பணியிடங்களான உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய பணியிடங்களுக்கும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் காட்டப்படும் குறும்படங்களை, திரை அரங்குகளில் மாணவர்களுக்கு இலவசமாக காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வை ரத்து செய்த, தமிழக அரசுக்கு நன்றி. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை தீர்க்க, அரசு முயல வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் மதிவாணன், டேவீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X