பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூச திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திக்கடன்

Added : பிப் 09, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் நடந்த தைப்பூச திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணி சுவாமி கோவிலில், 83ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தைப்பூச திருநாளையொட்டி காலை, 4:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவுக்கு பக்தர்கள் பால்குடங்களை எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தங்கள் முதுகில் அலகு குத்தி வாகனங்களை இழுத்தும், கிரேன் மூலம் பறந்து வந்தும் முருகனுக்கு மாலை அணிவித்து வேண்டுதல் நிறைவேற்றினர். பக்தர்கள் காவடியுடன் நீண்டவரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்றுமுதல், கோவில் வளாகத்தில் மாட்டுச்சந்தை கூடியது. ஆனால், நேற்று சொற்ப அளவிலேயே மாடுகளை மக்கள் கொண்டு வந்திருந்தனர். திருவிழாவையொட்டி, டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X