பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் லோக் அதாலத்: 1,186 வழக்குகளுக்கு சமரச தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த மெகா லோக் அதாலத்தில், 1,186 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள, அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த லோக் அதாலத்துக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) கலாவதி தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அறிவொளி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, தலைமை குற்றவியல் நீதிபதி ரவி மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள, பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. லோக் அதாலத்தில், மாவட்டம் முழுவதும், 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு, 4,625 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 1,186 வழக்குகளுக்கு, ஆறு கோடியே, 33 லட்ச ரூபாய் அளவுக்கு சமரசமாக தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X