தாய்லாந்து துப்பாக்கிச்சூடு : 21 பேரை கொன்றவன் சுட்டுக்கொலை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (11)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொராட்: தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 21 பேரை கொலை செய்த ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.


தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 155 மைல் தூரத்தில் உள்ளது நாகோன் ரட்சசிமா Nakhon Ratchasima நகரம். இங்குள்ள டெர்மினல் 21 என்ற பிரசித்தி பெற்ற ஷாப்பிங் மால் முன், சனிக்கிழமை பிற்பகல் ராணுவ வாகனத்தில் வந்திறங்கிய மர்ம ஆசாமி எந்திரத் துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டான். பிறகு ஷாப்பிங் மாலுக்குள் சென்று சுட்டான். இதில், 21 பேர் பலியாயினர்.

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் 21 பேர் பலியாகினர். மேலும் 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் ஜக்ராபாந்த் தோமா என்ற 32 வயது ராணுவ வீரர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று (பிப்.,08) பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் துவங்கி உள்ளது.
அடுத்தடுத்து பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு பிறகு தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, பிணைகைதிகளாக இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் நடப்பதற்கு முன்பு, கொலைச் செயலில் ஈடுபட்டவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் கருப்பு நிற முகமூடி அணிந்த போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நீக்கப்பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
10-பிப்-202010:38:25 IST Report Abuse
சீனி ராணுவ ஜவானுக்கும், அதிகாரிக்கும்ள்ள தனிப்பட்ட சொத்து தகறாரு வீதிக்கு வந்து 27 பேரை காவு வாங்கி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
09-பிப்-202016:09:28 IST Report Abuse
dandy பம்பாய் தாஜ் ஹோட்டல் தாக்க பட்டபோது ..தீவிரவாதிகளை வெளியேற்ற ஒரு வாரம் தேய்வை பட்டது அப்போது உள்நாட்டு அமைச்சர் செட்டியார்
Rate this:
Share this comment
Cancel
Nethiadi - Thiruvarur,இந்தியா
09-பிப்-202009:55:43 IST Report Abuse
Nethiadi RSS தீவிரவாதி ஒருவன் JNU பல்கலைக்கழக மாணவர்களை பார்த்து சுட்டான் அவன் மீது என்ன நடவடிக்கை ?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-202015:56:00 IST Report Abuse
தமிழ்வேல் போலீ பீசுங்களுக்கு, நாங்க அமெரிக்கன் கிட்டே துப்பாக்கி கொள்முதல் செய்வோம். ஆனால், எங்களுக்கு சுடத் தெரியாது....
Rate this:
Share this comment
Hari - chennai,இந்தியா
09-பிப்-202015:57:52 IST Report Abuse
Hariமூடி வையுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X