தாய்லாந்து துப்பாக்கிச்சூடு : 21 பேரை கொன்றவன் சுட்டுக்கொலை| Dinamalar

தாய்லாந்து துப்பாக்கிச்சூடு : 21 பேரை கொன்றவன் சுட்டுக்கொலை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (11)
Share
கொராட்: தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 21 பேரை கொலை செய்த ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் 21 பேர் பலியாகினர். மேலும் 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம்

இந்த செய்தியை கேட்க

கொராட்: தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 21 பேரை கொலை செய்த ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.latest tamil newsதாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் 21 பேர் பலியாகினர். மேலும் 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் ஜக்ராபாந்த் தோமா என்ற 32 வயது ராணுவ வீரர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று (பிப்.,08) பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் துவங்கி உள்ளது.


latest tamil news


அடுத்தடுத்து பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு பிறகு தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, பிணைகைதிகளாக இருந்தவர்களை மீட்டுள்ளனர்.


latest tamil newsசம்பவம் நடப்பதற்கு முன்பு, கொலைச் செயலில் ஈடுபட்டவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் கருப்பு நிற முகமூடி அணிந்த போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நீக்கப்பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X