பொது செய்தி

தமிழ்நாடு

காலமுறை ஊதியம் கேட்டு டாஸ்மாக் ஊழியர் சங்கம் தீர்மானம்

Added : பிப் 09, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: காலமுறை ஊதியம் வழங்கக்கேட்டு, டாஸ்மாக் ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாடு மாநில டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், பணியாளர்கள் சங்க, மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற டி.ஆர்.ஓ., இளங்கோவன் சங்கத்தை துவக்கி வைத்து பேசினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள கணினி உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர் ஆகிய பணிகளுக்கு, டாஸ்மாக் பணியாளர்களை அமர்த்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் மாதம், 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு, 12 லட்சம் ரூபாய் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்., 6ல், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், மாநிலம் தழுவிய ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. அதில் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களும் பங்கேற்பது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X