பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : பிப் 09, 2020
Advertisement

கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா? குமாரபாளையம், அரசு மருத்துவமனை எதிர் வீதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி தரைத்தளம் மண் தரையாக இருப்பதால் மழைக்காலங்கங்களில் சேறும், சகதியுமாக மாறி, குழந்தைகள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதே நிலை பல நாட்களாக நீடிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும்.

- டி. பன்னீர்செல்வம், குமாரபாளையம்.

ஜி.ஹெச்.,ல் குடிநீர் வசதி தேவை: பள்ளிபாளையம் அடுத்த, ஆவாரங்காடு அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு போதுமான குடிநீர் வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். குடிநீர் தேவைக்கு வெளியில் வந்து வாங்கிச் செல்கின்றனர். எனவே, தேவைக்கு ஏற்ப குடிநீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

- எம்.பிரபாகரன், பள்ளிபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X