பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூச திருவிழா காவடியுடன் பக்தர்கள் பயணம்

Added : பிப் 09, 2020
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் காவடியுடன் பயணம் மேற்கொண்டனர்.
மல்லசமுத்திரம் அருகே, பிரசித்தி பெற்ற காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூச நாளான நேற்று, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இதற்காக ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் அபி ?ஷக பொருட்கள், அலங்கார பந்தலுக்கு தேவையாக, இளநீர், வாழை, மாவிலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேற்று முன்தினமே டிராக்டர், லாரிகளில் கொண்டு சென்றனர். இன்னும் சிலர் காவடியுடன் ஆடிக்கொண்டு, காளிப்பட்டிக்கு சென்றனர். கடந்தப்பட்டி காவடி குழுவினர், சிறப்பு பூஜைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு காளிப்பட்டி முருகனை தரிசிக்க பயணம் மேற்கொண்டனர். 30 கி.மீ., தூரத்திற்கு காவடியுடன் நடனமாடி செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் காவடியுடன் சென்றனர். நேற்று சுவாமியை தரிசித்து விட்டு இரவு வீடு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X