பொது செய்தி

தமிழ்நாடு

வையப்பமலை கோவிலில் தைப்பூச சிறப்பு பூஜை

Added : பிப் 09, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: வையப்பமலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா சிறப்பு பூஜை நடந்தது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை சுப்ரமணியம் சுவாமி கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணியளவில், பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி வலம்வந்தனர். மதியம், 12:00 மணிக்கு, 16 வகை மூலிகைகளால் மூலவருக்கு சிறப்பு அபி ?ஷக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கவசத்தில் முருகன் அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X