ராசிபுரம்: ராசிபுரம் இன்னர்வீல் சங்கம், வித்யாமந்திர் கல்வி நிறுவனங்கள், விவேகானந்தா எஜூகேஷனல் டிரஸ்ட், இந்திய மருத்துவ சங்கம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் எஜூகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கம், ராயல் ரோட்டரி சங்கம், அகரம் மகளிர் மன்றம் ஆகியவை இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின. மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சேலம் சாலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.
இன்று மருத்துவ முகாம்: ராசிபுரம், காட்டூர் சாலை, வித்யாமந்திர் பள்ளியில், இன்று புற்றுநோய் கண்டறியும் முகாம் நடக்கிறது. மருத்துவ நிபுணர் செல்லப்பிள்ளை, வாய்ப்புற்றுநோய் நிபுணர் மதுமிதா உள்ளிட்டோர் பரிசோதனை செய்ய உள்ளனர். கர்ப்பப்பை பரிசோதனை இலவசமாகவும், மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு, 500 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE