மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடந்த தைப்பூசத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, கடந்த, 31ல், கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தினமும் காலை, அபி ?ஷகம், இரவில், அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு திருத்தேரில் ஏற்றப்பட்டது. அதையடுத்து, தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. எம்.எல்.ஏ., பாஸ்கர், ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி, கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தங்கமுத்து, பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். மேலும், காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், இளநீர், பால், புஷ்பம் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்துக் கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4:00 மணிக்கு, மோகனூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மீது, கடலை, கொழுக்கட்டை போன்றவற்றை தூவி, சுவாமிக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு, 8:00 மணிக்கு, சிறப்பு வாணவேடிக்கை, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மககள் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE