பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்: கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி அறிவுரை

Added : பிப் 09, 2020
Share
Advertisement
ப.வேலூர்: தென்னையில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அறிகுறி இருந்தால், இலைகளின் அடிப்பாகத்தில் சுருள் வடிவத்தில் காணப்படும். ஓலைகளின் அடிபகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சி இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவ கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள, 10 - 12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. கீழ்கண்ட மேலாண்மை முறைகள் மூலம் இவற்றை தடுக்கலாம். மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த

ப.வேலூர்: தென்னையில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அறிகுறி இருந்தால், இலைகளின் அடிப்பாகத்தில் சுருள் வடிவத்தில் காணப்படும். ஓலைகளின் அடிபகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சி இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவ கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள, 10 - 12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. கீழ்கண்ட மேலாண்மை முறைகள் மூலம் இவற்றை தடுக்கலாம். மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலிதீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் (நீளம் 3 அடி) ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில், ஆறடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க, இலை மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். கிரைசோபிட் இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஹெக்டேருக்கு, 1,000 என்ற எண்ணிக்கையில் விடவும். இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது காக்ஸினெல் இட்ட பொறி வண்டுகள், என்கார்சியே ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளில் இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். எனவே, தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகள் கொண்டு தாக்குகுதலுக்குள்ளான ஓலைகளை சிறியளவில் வெட்டி, பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைக்கவும். ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மிலி (அ)அசாடிராக்டின் 1 மூடி (2 மில்லி,) மருந்தை ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்கவும். கரும்பூசணத்தை நிவர்த்தி செய்ய மைதாமாவு கரைசலை (லிட்டர் நீருக்கு, 25 கிராம் பசை) ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். மேலும், அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும் போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்தது. விபரங்களுக்கு, வட்டார வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கபிலர்மலை வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X