பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 09, 2020
Advertisement

முட்புதரை அகற்றணும்! எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் இருந்து நெய்காரன்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அத்திக்காடு குட்டை ஓரத்தில், அதிகளவில் முட்புதர்கள் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் விஷஜந்துக்கள் நடமாடி வருவதால், பொதுமக்கள் மற்றும் டியூஷன் முடித்து செல்லும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, முட்புதர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.
பிரிவு சாலையில் அறிவிப்பு தேவை: மல்லசமுத்திரத்திரம் ஒன்றியம், ராசிபுரம்- திருச்செங்கோடு சாலையில் மரப்பரை பிரிவு சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் நிமிடத்திற்கொருமுறை வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, பிரிவுசாலை இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. இவ்வழியாக புதிதாக வருவோர் தாங்கள் செல்ல வேண்டிய சாலை தெரியாமல் பல கி.மீ., தொலைவு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் நீடிக்கிறது. அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓடையை தூர்வார வேண்டுகோள்: பள்ளிபாளையம் ஒன்றியம், ஆவத்திபாளையம் பகுதியில் ஆற்றுக்கு செல்லும் சாலையில், ஓடையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழே தண்ணீர் செல்லும் வகையில் பெரிய குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், மண் அடைப்பு ஏற்பட்டு குப்பை, கழிவு அதிகளவு தேங்கி தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகளவு மழை பெய்யும் போது, அருகில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. ஓடையை தூர்வார வேண்டும்.

சாலையில் திரியும் குதிரையால் விபத்து: குமாரபாளையம், தம்மண்ணன் சாலை, அய்யன் தோட்டம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் அதிக அளவிலான குதிரைகள் திரிந்து வருகின்றன. இவை வாகன ஓட்டிகளை துரத்துவதும், குடியிருப்பு வாசிகளை கடிப்பதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குதிரைகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

பாதுகாப்பற்ற பொது கிணறு: எலச்சிபாளையம் ஒன்றியம், சின்னமாணிக்கம்பாளையத்தில், 30 வருடங்களுக்கு முன், குடியிருப்புகள் அருகே பொதுக் கிணறு அமைக்கப்பட்டது. இதுவரை, கம்பி வளையம் அமைக்கப்படவில்லை. குழந்தைகள் எட்டிப் பார்த்தால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குடியிருப்புகளில் இருக்கும் கால்நடைகள் உள்ளே விழுந்து உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X