பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 1,819 வழக்குகள் ரூ.9.99 கோடிக்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement

நாமக்கல்: தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுரைப்படி, நாமக்கல் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி சுஜாதா முன்னிலை வகித்தார். மக்கள் நீதிமன்றத்தில், வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில், வழக்குகள் நடத்தப்பட்டன. விபத்து, காசோலை, குடும்ப நலம், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், இதர பொது பயன்பாட்டு வழக்குகளும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர, புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள், பிரச்னைகளுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. நேற்று, 6,054 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 1,819 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம், ஒன்பது கோடியே, 99 லட்சத்து, 2,088 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X