பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை சாகுபடி பணிகள் தீவிரம்

Added : பிப் 09, 2020
Advertisement

கிருஷ்ணராயபுரம்: பூஞ்சோலைபுதூரில், தொட்டியில் தண்ணீர் சேகரித்து தென்னை வளர்ப்பு பணியில் விவசாயி ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பூஞ்சோலைபுதூரில் சுப்புராமன் என்ற விவசாயி, தென்னை வளர்ப்பு சாகுபடி செய்து வருகிறார். இவர் தோட்டத்தில், சோலார் மூலம் போர்வெல் அமைத்து, அதன் மூலம் தண்ணீர் எடுத்து பெரிய அளவில் கட்டிய சிமென்ட் தொட்டியில் தண்ணீர் சேகரித்து, பிறகு தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார். இதன் மூலம் குறைந்த தண்ணீர் செலவு செய்து தென்னை மரம் வளர்ச்சி கண்டுள்ளது. மரங்கள் தற்போது காய்கள் பிடித்து வருகின்றன. ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X