பொது செய்தி

தமிழ்நாடு

பனிப்பொழிவால் எலுமிச்சை விலை சரிவு: கோடையை எதிர்நோக்கும் வியாபாரிகள்

Added : பிப் 09, 2020
Advertisement

கரூர்: கடும் பனிப் பொழிவால், எலுமிச்சை பழத்துக்கு விலை குறைந்துள்ளது. இதனால், கோடையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம் பாளையம் பட்டி, வீரன்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் பீஜப்பூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, கரூர் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கஜா புயல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில், ஏராளமான எலுமிச்சை மரங்கள் அழிந்து விட்டன. இதனால், கடந்த பிப்ரவரி மாதம், 50 கிலோ கொண்ட மூட்டை, 3,000 முதல், 4,000 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 50 கிலோ கொண்ட மூட்டை, 800 முதல், 1,200 ரூபாய் வரை மட்டும் விற்பனையாகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கடந்த, இரண்டு மாதமாக கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால், உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழத்துக்கு தேவை குறைந்து விட்டது. இதனால், விலையும் பல மடங்கு குறைந்துள்ளது. அடுத்த மாதம் கோடை காலம் துவங்க உள்ளதால், எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, விலை உயர வாய்ப்புண்டு. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X