நெருங்குகிறது கோடை காலம்; நிழற்கூடங்களை சீரமைக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெருங்குகிறது கோடை காலம்; நிழற்கூடங்களை சீரமைக்க கோரிக்கை

Added : பிப் 09, 2020
Share

கரூர்: கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில், கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, சேதமடைந்தள்ள பெரும்பாலான நிழற்கூடங்களை சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை ஜரூராக நடந்து வருகின்றன. இதனால், கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். குறிப்பாக, திருச்சி செல்லும் சாலையில் உள்ள புலியூர், வீரராக்கியம், மணவாசி, மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து நிறைய தொழிலாளர்கள் பஸ் மூலம் கரூர் வந்து செல்கின்றனர். ஆனால், கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற்கூடங்களின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. பயணிகள் உட்கார அமைக்கப்பட்ட இருக்கைகள் மாயமாகி விட்டன. இதனால், பயணிகள் மழை மற்றும் வெயிலுக்கு நிழற்கூடத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு கோடை காலத்தையொட்டி, மாவட்டத்தில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நிழற்கூடம் சேதமடைந்த இடங்களில், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுவர். எனவே, பொது மக்களின் நலன் கருதி, கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் சேதமடைந்துள்ள நிழற்கூடங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X