பொது செய்தி

தமிழ்நாடு

தரகம்பட்டி ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

கரூர்: தரகம்பட்டியில் உள்ள ரேஷன் கடையை, இரண்டாக பிரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், தரகம்பட்டி பஞ்சாயத்தில், கே.கே.நகர், வையாளிமடை, சங்கி பூசாரியூர், நவக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அதில், 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். ஆனால், தரகம்பட்டியில் மட்டும் ரேஷன் கடை உள்ளது. மற்ற கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், 3 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். இதுகுறித்து, கிராம மக்கள் கூறுகையில், 'ரேஷன் பொருட்களை வாங்க வேலைக்கு விடுமுறை எடுக்க, வேண்டிய நிலை உள்ளது. அப்போதும், எதிர்பார்க்கும் பொருட்கள் கிடைப்பதில் சந்தேகம் உள்ளது. இதனால், தரகம்பட்டி ரேஷன் கடையை, இரண்டாக பிரித்து, கே.கே.நகர் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து, புதிதாக ஒரு ரேஷன் கடையை ஏற்படுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X