பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 09, 2020
Advertisement

மேல்நிலை தொட்டி படிகள் சேதம்: கரூர் அருகே, ராயனூரில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் பல பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் தொட்டியின் மேல்பகுதிக்கு செல்ல, கட்டப்பட்ட படிக்கட்டுகள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால், தொட்டியை பராமரிக்க செல்லும் ஊழியர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேல்நிலை தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகளை புதுப்பிக்க வேண்டும்.
மின் கம்பிகளில் உரசும் மரக்கிளை: கரூர், ராயனூர் சுகாதார நிலையம் அருகில், மின் கம்பிகளை சுற்றி மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரக்கிளைகள் மின் கம்பியை உரசுவதால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது, தெரு விளக்குகளை கூட மறைக்கும் அளவில் செடிகள் வளர்ந்துள்ளதால், சாலையில் வெளிச்சம் தெரிவது கிடையாது. மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிக்காக, மின் நிறுத்தம் செய்து விட்டு முறையாக பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்வது கிடையாது. மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

குழாய் உடைப்பு; வீணாகும் தண்ணீர்: கரூர், அசோக்நரில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழாய் உடைந்து, பல நாட்களாக தண்ணீர் வீணாக செல்வதை, நகராட்சி பணியாளர்கள் இன்னும் சரிசெய்யவில்லை. இதனால், இந்த குழாய் வழியாக தண்ணீர் திறக்கும் போது, தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. தரமற்ற குழாய் பதிக்கப்பட்டுள்ளதால், அதிக அழுத்தம் தாங்காமல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்படுகிறது. இதுபோல் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

சாய்ந்த கம்பம் மாற்ற கோரிக்கை: கரூர், நேதாஜி நகரில் இரும்பு மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இது சாய்ந்து விழும் நிலையில் பல மாதங்களாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின் வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. சேதமான மின்கம்பம் உடைந்து விழும் பட்சத்தில், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. மின் கம்பத்தை விரைந்து மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா? கரூர் அருகே, திருமாநிலையூர் சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில், முட்புதர்கள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் வீசி வருகிறது. மழை பெய்யும் போது, கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது. சாக்கடை கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X