பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றம்: 679 வழக்குகளுக்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement

கரூர்: கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த, மக்கள் நீதிமன்றத்தில், 679 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று, கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில், மக்கள் நீதிமன்றம் நடந்தது. வங்கி சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் உள்பட, 679 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ஒன்பது கோடியே, 69 லட்சத்து, 25 ஆயிரத்து, 718 ரூபாய் இழப்பீடு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. கரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி மோகன்ராம், மகளிர் நீதிமன்ற நீதிபதி சசிகலா, கூடுதல் சார்பு நீதிபதி சுந்தரய்யா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X