பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.12க்கு காப்பீடு திட்டம்: அமைச்சர் தகவல்

Added : பிப் 09, 2020
Advertisement

கரூர்: க.பரமத்தி ஒன்றியம், மொ.தொட்டம்பட்டியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தேசிய ஊரக உறுதி யளிப்பு திட்ட பணியாளர்களை, காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கும் விழா நடந்தது. இதில், 100 பேருக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்ததற்கான ஆவணங்களை வழங்கினார்.
பின், அவர் கூறியதாவது: இத்திட்டத்தில், ஓராண்டுக்கு, 12 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். இதற்கான வயது வரம்பு, 18 - 65. ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வங்கியில் அனுமதி கடிதம் எழுதிக்கொடுத்தால், வங்கி கணக்கிலிருந்து காப்பீட்டுக்கான தொகையை எடுத்துக்கொள்வர். விபத்தினால் மரணம் ஏற்பட்டால், 2 லட்சம், உறுப்பு இழப்பு ஏற்பட்டால், ஒரு லட்சம் கிடைக்கும். காப்பீடு காலம், ஜூன், 1 முதல், மே, 31. மற்றொரு காப்பீட்டு திட்டத்தில், 330 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு வயது வரம்பு, 18 - 55. விபத்து மற்றும் இயற்கை மரணம் ஏற்பட்டால், இரண்டு லட்சம் ரூபாய் உங்களின் வாரிசுதாரர்களுக்கு கிடைக்கும். இதற்கு வங்கி கணக்கு அவசியம். இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான ஆவணங்களை, உங்கள் அருகாமையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, துலுக்கம்பாளையத்தில், 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X