நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தம்: கரூர் போலீசார் அலட்சியம்

Added : பிப் 09, 2020
Advertisement

கரூர்: கரூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த, நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதை, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கரூர், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை சுற்றி, கோவை சாலை, திருச்சி சாலை, தின்னப்பா கார்னர் சாலை மற்றும் ஜவஹர் பஜார் சாலைகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஜவஹர் பஜாரில் உள்ள பெரும்பாலான ஜவுளி கடைகள், நகை கடைகள், பேன்சி ஸ்டோர்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை. இதனால், வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்குவதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும், 'நோ-பார்க்கிங்' என, போலீசாரால் அறிவிக்கப்பட்ட பகுகளில் கார் உள்ளிட்ட வாகனங்களை பலமணி நேரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதை, போக்குவரத்து போலீசார், கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், கரூர் நகரப்பகுதிகளில் நாள் தோறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, 'நோ-பார்க்கிங்' பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X