பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய கோவிலில் சீமான் தரிசனம்: வறுத்தெடுக்கும் 'நெட்டீசன்'கள்

Added : பிப் 09, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில், தனது தம்பிகளுடன், கருவறையில் நின்று தரிசனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, 'நெட்டீசன்'கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒங்கிணைப்பாளர் சீமான், தன்னை நாத்திகவாதியாகவும், சிவன் ஒரு... எனவும் கூட்டங்களில் பேசியுள்ளார். அப்படி பேசி வந்த சீமான், 'முருகன் தமிழ் கடவுள், நான் அதை வணங்குகிறேன்' எனவும் கூறுகிறார். இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலில், கடந்த, 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று மாலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவிலுக்கு வந்தார். நேராக கருவறையில் அமர்ந்து தரிசனம் செய்து, மாலை மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். அதன் பின், அவர் சுவாமி தரிசனம் செய்யும் போட்டோக்களை, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார். இந்த போட்டோக்களை கையில் எடுத்த நெட்டீசன்கள், மீம்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர். அதில், பொதுக்கூட்டம் ஒன்றில், 'சிவலிங்கம் என்றால் என்ன, பூ போட்டு, பால் ஊத்தும் தாய்மார்களை, யாரவது சொல்லுங்கள், அப்படி யாராவது சொல்லி விட்டால், ஹிந்து மதத்தை பற்றி நான் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்கிறேன். மீறி விமர்சனம் செய்தால், என்னை செருப்பை கழட்டி அடிக்கலாம்' என, சீமான் பேசினார். அந்த வீடியோவை அன்று எனவும், சீமான் தரிசனம் செய்யும் போட்டோவை இன்று எனவும் குறிப்பிட்டு, செருப்பு தயாராக உள்ளதாக, என மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சிலர், சீமான் சிவலிங்கத்தின் கீழ் உட்கார்ந்து சாமி கும்பிடுவது போல படத்தை போட்டு, 'சிவலிங்கத்தை என்ன என கேட்டாய், ஆனா பரம் பொருள், கீழே உட்கார வைத்து விட்டார்' எனவும், வெளியிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X