பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டு சர்க்கரை, வெல்லம் விலை சரிவு

Added : பிப் 09, 2020
Advertisement

ஈரோடு: பொங்கல் பண்டிகைக்குப்பின், வெல்லம், நாட்டு சர்க்கரை விலை சரிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு பரவலாக மழை பெய்ததால், கரும்பு சாகுபடி, 15 ஆயிரம் ?ஹக்?டருக்கு மேல் உள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்த கரும்பு தவிர, மீதமுள்ள கரும்பை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, கோபி, அவல்பூந்துறை, மொடக் குறிச்சி, அரச்சலூர் உட்பட பல்வேறு இடங்களில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைக்கு விற்கின்றனர். அங்கு தயாராகும் வெல்லம், நாட்டு சக்கரை, கவுந்தப்பாடி மற்றும் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பொங்கலுக்கு முன், டிசம்பர் மாதம், சித்தோடு மார்க்கெட்டில், 30 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை, 1,100 ரூபாய் முதல், 1,220 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், 1,240 ரூபாய் முதல், 1,280 ரூபாய்க்கும், உருண்டை வெல்லம், 1,100 ரூபாய் முதல், 1,310 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த பொங்கலின்போது வெல்லம், சர்க்கரை வரத்து அதிகரித்து, உருண்டை வெல்லம், 1,250 முதல், 1,300 ரூபாய்க்கும், நாட்டு சர்க்கரை, 1,200 ரூபாய் முதல், 1,250 ரூபாய், அச்சு வெல்லம், 1,179 ரூபாய் முதல், 1,210 ரூபாய் என விலை உயர்ந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், நேற்று நாட்டு சர்க்கரை, 30 கிலோ கொண்ட, 3,000 மூட்டை வரத்தாகி, 1,050 ரூபாய் முதல், 1,110 ரூபாய் வரையிலும், உருண்டை வெல்லம், 7,400 மூட்டை வரை வரத்தாகி, 1,000 ரூபாய் முதல், 1,100 ரூபாய் வரையிலும், அச்சு வெல்லம், 1,000 மூட்டை வரை வரத்தாகி, 1,050 ரூபாய் முதல், 1,120 ரூபாய் வரை விற்பனையானது. நேற்றைய நிலையில் நாட்டு சர்க்கரை, 30 கிலோ மூட்டைக்கு, 150 ரூபாயும், உருண்டை வெல்லம், 250 ரூபாயும், அச்சு வெல்லம், 130 ரூபாய் வரை, விலை குறைந்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X