தமிழகம், கேரளாவில் முட்டை விலை 340 காசாக நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், கேரளாவில் முட்டை விலை 340 காசாக நிர்ணயம்

Added : பிப் 09, 2020
Share

நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 340 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 335 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, ஐந்து காசு உயர்த்தி, 340 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 383, ஐதராபாத், 320, விஜயவாடா, 325, பர்வாலா, 400, மும்பை, 380, மைசூரு, 368, பெங்களூரு, 360, கோல்கட்டா, 348, டில்லி, 333. பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கிலோ, 62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையிலும், மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X