பொது செய்தி

தமிழ்நாடு

2 நாளில் ரூ.4 கோடிக்கு பருத்தி வர்த்தகம்

Added : பிப் 09, 2020
Share
Advertisement

இடைப்பாடி: கொங்கணாபுரத்தில், இரு நாளில், நான்கு கோடியே, 17 லட்சம் ரூபாய்க்கு, பருத்தி வர்த்தகம் நடந்தது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்திலுள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினமும், நேற்றும், பருத்தி ஏலம் நடந்தது. அதில், பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள், பருத்தி மூட்டையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதற்கேற்ப, வியாபாரிகள் குவிந்தனர். பி.டி., ரகம் குவிண்டால், 5,189 முதல், 6,061 ரூபாய், டி.சி.எச்., ரகம், 6,800 முதல், 7,611 ரூபாய் வரை ஏலம் போனது. இரு நாளில், 18 ஆயிரத்து, 900 மூட்டைகள் மூலம், நான்கு கோடியே, 17 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X