பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.15 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Added : பிப் 09, 2020
Advertisement

இடைப்பாடி: கொங்கணாபுரத்தில், 2.15 கோடி ரூபாய்க்கு, ஆடுகள் விற்பனை நடந்தது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, ஏராளமான விவசாயிகள், ஆடுகளை கொண்டுவந்தனர். அதற்கேற்ப, வியாபாரிகள் குவிந்தனர். 10 கிலோ எடையுள்ள ஆடு, 5,900 முதல், 6,500 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தைக்கு, கடந்த வாரத்தைவிட, ஆடுகள் வரத்து குறைந்திருந்தது. இருப்பினும், விலை சற்று கூடுதலாக விற்கப்பட்டது. 3,050 ஆடுகள் மூலம், 2.15 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X