மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

Added : பிப் 09, 2020
Share
ஆனைமலை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுசிறப்பாக நடக்கும். குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம். நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின், 6ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடந்தது. இன்று, 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல்

ஆனைமலை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுசிறப்பாக நடக்கும். குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம். நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின், 6ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடந்தது. இன்று, 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் குண்டத்தில் இருந்த பூ அள்ளிக்கொடுத்து, அம்மனை மனமுருகி வழிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X