பொது செய்தி

இந்தியா

சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதியில்லை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, 2020 ஜன.,15 அல்லது அதற்கு பிறகு சீனா சென்று வந்த வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது என இந்திய விமான போக்குவரத்துறை இயக்குனர்கள் தெரிவித்துள்ளது.சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதால் விமானம், தரைவழி அல்லது கடல்வழி என எந்த வழியிலும் அவர்கள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, 2020 ஜன.,15 அல்லது அதற்கு பிறகு சீனா சென்று வந்த வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது என இந்திய விமான போக்குவரத்துறை இயக்குனர்கள் தெரிவித்துள்ளது.latest tamil news


சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதால் விமானம், தரைவழி அல்லது கடல்வழி என எந்த வழியிலும் அவர்கள் இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளான நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டினருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் அனைத்து இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும் அதில், சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விசாக்களையும் இந்தியா நிறுத்தி உள்ளதால், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீன நாட்டினர் அல்லது தற்போது சீனாவில் இருக்கும் மற்ற வெளிநாட்டினருக்கு வழங்கும் விசாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏதாவது காரணத்திற்காக கட்டாயம் அவர்கள் இந்தியா வர வேண்டும் என்றால் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காயில் உள்ள தூதரகம் ஆகியவற்றை அனுகலாம். இந்த விசா கட்டுப்பாடு சீன நாட்டினருக்கு மட்டுமின்றி, சீனாவில் இருந்து வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
09-பிப்-202014:10:42 IST Report Abuse
தஞ்சை மன்னர் பாகிஸ்தான் மாணவர்களை அழைக்கவில்லை என்று முதல் பக்கத்தில் போட்ட பத்திரிக்கைகள் இப்போது என்ன சொல்ல போகுது , வரும் முன் காப்பது நல்லதா வந்தபின் காப்பது நல்லதா
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
09-பிப்-202011:28:24 IST Report Abuse
Nathan வித்தை கற்றுக் கொடுத்தவனிடமே வஞ்சகம் செய்வதில் ஐரோப்பியர்களும் சீனர்களும் பிரசித்தம். கணித சாம்யங்களையும், விமானத்திலிருந்து, ஆற்றில் அணை கட்டுதல் வரை இங்கு வந்து நூல்களை திருடி ஆராய்ச்சி என்று கவர்ந்து சென்ற கயவர்கள் ஐரோப்பியர்கள் . மூக்கு சப்பைகளோ இந்திய தற்காப்பு கலை, மற்றும் மருத்துவ நூல்களை புத்த சன்யாசிகளால் கற்றபின், நம் மீதே பிரயோகிக்க முயல்பவர்கள். அரபுக்களோ , உள்ளே வந்து பின், தான் மட்டும், தான் மட்டுமே வாழ, ஏனையோர் மடிய, போதிக்கப் பட்டு வளர்பவர்கள் . பாரதம் போல் , அதன் நல்ல உள்ளம் கொண்ட கொள்கை போல் உலகில் எங்கும் காண முடியாது.
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
09-பிப்-202014:39:54 IST Report Abuse
baygonsprayநல்ல வேளை நீங்க உருவாகின ஜாதி, வர்ணாஸ்ரம தர்மம், தீண்டாமை , பெண் அடிமைத்தனம் எல்லாம் copy அடிக்கில, இல்லைனா உலகமே நாறி போய் இருக்கும்...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-202016:03:30 IST Report Abuse
தமிழவேல் நாதன், நாம் செய்யாததை, அலட்சிய படுத்தியதை அவர்கள் செய்தார்கள். நாம் ஓலைச்சுசாடியில் எழுத்தாணி கொண்டு எழுதிய பிறகு எதுவுமே மேற்கொண்டு செய்யாமற் (ஆங்கிலேயர்களை ஆதிக்கத்தினால் ?) உறங்கிவிட்டோம் (?)....
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
09-பிப்-202019:23:28 IST Report Abuse
Nathanபாரதம் நாராதிருக்க ஜாதிக கட்டு மட்டுமே காரணம். வேற்று மாதமாய் நீ விலகினால் நாறுவாய்....
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
09-பிப்-202019:35:45 IST Report Abuse
Nathanதீண்டாமை , பெண் அடிமைத்தனம் என்று பேச வந்துட்டாரு,...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-பிப்-202011:00:10 IST Report Abuse
A.George Alphonse Very good and appreciated decision.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X