சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதியில்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதியில்லை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (10)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, 2020 ஜன.,15 அல்லது அதற்கு பிறகு சீனா சென்று வந்த வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது என இந்திய விமான போக்குவரத்துறை இயக்குனர்கள் தெரிவித்துள்ளது.



latest tamil news


சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதால் விமானம், தரைவழி அல்லது கடல்வழி என எந்த வழியிலும் அவர்கள் இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளான நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டினருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் அனைத்து இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும் அதில், சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விசாக்களையும் இந்தியா நிறுத்தி உள்ளதால், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீன நாட்டினர் அல்லது தற்போது சீனாவில் இருக்கும் மற்ற வெளிநாட்டினருக்கு வழங்கும் விசாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏதாவது காரணத்திற்காக கட்டாயம் அவர்கள் இந்தியா வர வேண்டும் என்றால் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காயில் உள்ள தூதரகம் ஆகியவற்றை அனுகலாம். இந்த விசா கட்டுப்பாடு சீன நாட்டினருக்கு மட்டுமின்றி, சீனாவில் இருந்து வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X