'ஆவணங்கள் பத்திரம்' : பா.ஜ., வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (38)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருந்த போது ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறி கர்நாடகா பா.ஜ., அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது.






நேற்று (பிப்.,08) டில்லி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது கர்நாடகா பா.ஜ., சார்பில் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், இஸ்லாமிய பெண்கள் பலர் கையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் நீண்ட வரிசையில் நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவுடன், 'ஆவணங்களை பத்திரமாக வைத்திருங்கள். என்பிஆர் நடைமுறைபடுத்தும் போது நீங்கள் மீண்டும் அவற்றை காட்ட வேண்டி இருக்கும்,' எனவும் கருத்து பதிவிடப்பட்டிருந்தது.




நாடு முழுவதும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக ஏற்கனவே போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஏஏ அமல்படுத்தப்பட்டதும், என்பிஆர் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருவதும் டில்லி தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்படி ஒரு வீடியோ பதிவிடப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. மேலும் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எந்த வித ஆவணங்களும் கேட்கப்படாது என மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் கூறியதற்கு மாறாக ஆவணங்கள் பத்திரம் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
10-பிப்-202009:52:44 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த நாட்டில் குடிமகனாக வாழ விருப்பம் உள்ளவர்கள் ஏன் தாங்கள் அடையாளத்தை காட்ட தயக்க படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
10-பிப்-202008:39:56 IST Report Abuse
ரத்தினம் உலகத்திலேயே, ஓட்டுக்காக அந்நியனை உள்ள விடணும்னு சொல்ற கேடு கெட்ட ஜென்மங்கள் வாழுற நாடு இந்தியா தான்.
Rate this:
Share this comment
Cancel
Mango Mani - Bangalore,இந்தியா
10-பிப்-202000:10:04 IST Report Abuse
Mango Mani ஏதோ தன் தலையில் தானே மண்ணை போட்டு கொள்ளுமாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X