பொது செய்தி

தமிழ்நாடு

'சூரிய ஒளி'யால் மின்னும் மாநகராட்சி

Added : பிப் 09, 2020
Advertisement
 'சூரிய ஒளி'யால் மின்னும் மாநகராட்சி

கோவை : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 3.6 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

சூரிய ஒளியில் மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை, மத்திய மரபுசாரா எரிசக்தி துறை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு தேவையான நிதியும் வழங்குகிறது. கோவை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையத்தில், தலா ஒரு மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைத்தது.

உக்கடத்தில் ஓராண்டாக செயல்படுத்தி, மின்னுற்பத்தி செய்து, செலவினத்தை குறைத்தது; சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தியதால், கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு சமீபத்தில் விருது வழங்கி கவுரவித்தது.கவுண்டம்பாளையத்தில் அமைத்துள்ள நிலையத்தில், சோதனை அடிப்படையில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக, நாளொன்றுக்கு, 4,500 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. தற்போது, நாளொன்றுக்கு, 5,100 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. கோடை காலத்தில், இதன் அளவீடு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதன் தொடர்ச்சியாக, ரூ.17 கோடியில், உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 3.6 மெகாவாட் திறனுள்ள மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 'பவர் கிரிட்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார் கூறுகையில், ''மின் உபயோகத்துக்கு ஏற்படும் செலவினத்தை குறைக்க முயற்சித்து வருகிறோம். உக்கடம் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம், விரைவில் பயன்பாட்டுக்கு வரும். வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும்போது, அதிகப்படியான மின்சாரம் தேவைப்படும். அதற்காக, 2 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X