சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'குழந்தை வேண்டுமா...': கூவி விற்ற போதை தந்தை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 'குழந்தை வேண்டுமா...': கூவி விற்ற போதை தந்தை

திருமங்கலம்: திருமங்கலத்தில், மது போதையில், பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தந்தையிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள, பூவாளூரைச் சேர்ந்தவர், ராஜதுரை, 30; திருப்பூர் பனியன் கம்பெனி ஊழியர். இவருக்கு சித்ரா, பேச்சியம்மாள் என, இரு மனைவியர் உள்ளனர். அவர்களுடன், திருப்பூரில் வசித்து வருகிறார். சித்ராவிற்கு, 10 வயதில் மகன் உள்ளார். பேச்சியம்மாளுக்கு, எட்டு மாதங்களுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது.இருமாதங்களுக்கு முன் கருத்து வேறுபாட்டால், திருநெல்வேலியில் உள்ள தாய் வீட்டிற்கு, பேச்சியம்மாள் மட்டும் சென்றுவிட்டார். எட்டு மாத குழந்தையை, ராஜதுரை, சித்ரா பராமரித்தனர்.

தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை என, பேச்சியம்மாளிடம் குழந்தையை ஒப்படைக்க, ராஜதுரை சென்றார்.செல்லும் வழியில், மதுரை மாவட்டம், திருமங்கலம் பஸ் நிலையத்திற்கு வந்தவர், அங்கிருந்தவர்களிடம், 'குழந்தையை வாங்கிக்கொள்கிறீர்களா' என, கேட்டுள்ளார். 'குழந்தைவேண்டுமா... குழந்தை வேண்டுமா' என, தொடர்ந்து கேட்டபடி இருந்ததால், அங்கிருந்தவர்கள், அவரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.அப்போது ராஜதுரை, மது போதையில் இருந்தது, தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசார், பேச்சியம்மாளை, திருமங்கலம் வரவழைத்து, குழந்தையை ஒப்படைத்தனர். ராஜதுரையிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-பிப்-202009:57:29 IST Report Abuse
அருணா நல்ல வேளை போதையில் குழந்தை வேண்டுமா... நான் இருக்கிறேன் என்று கூவாமல் விட்டாரே. கொடுமை. உள்ள தூக்கி போடணும்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
09-பிப்-202011:19:39 IST Report Abuse
Nallavan Nallavan லால்குடிக்கு அருகே உள்ள அந்த ஊர் .... பூவாளூர் .....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-பிப்-202010:54:38 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தமாதிரி ...களுக்கு எதற்கு குழந்தை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X