போராடுபவர்களுக்கு சிஏஏ மீது கோபமல்ல, மோடி மீது தான்: சுஷில் மோடி

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (43)
Advertisement
SushilModi, ShaheenBagh, CAA, PM, Modi, Protesters, Angry, Bihar, DeputyCM, பீகார், துணைமுதல்வர், சுஷில்மோடி, ஷாஹீன்பாக், சிஏஏ, குடியுரிமைசட்டம், பிரதமர், மோடி, போராட்டம், போராட்டக்காரர்கள், கோபம்,

இந்த செய்தியை கேட்க

பாட்னா: டில்லியின் ஷாஹீன் பாக்கில் சிஏஏ.,க்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு பிரதமர் மோடி மீது தான் கோபம் என பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: டில்லியின் ஷாஹீன் பாக்கில் தர்ணாவில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள், சிஏஏ மீது கோபப்படுவதில்லை, கடந்த ஆறு மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி அரசு செய்த பணிகளில் தான் கோபமாக உள்ளனர். முத்தலாக் மற்றும் காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்தது என அரசு செய்த பணிகளால் கோபத்தில் உள்ளனர். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழிவகுத்தது. இந்த கோபம்தான் ஷாஹீன் பாக் வடிவத்தில் வெளிவருகிறது.




சமீப காலமாக நாட்டில் முஸ்லிம் - தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. ஹிந்து சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் கூறி வருகின்றனர். இது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பீகாரில் தற்போது, இடதுசாரிகளுடன் செல்லும் இத்தகைய மக்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
10-பிப்-202001:45:53 IST Report Abuse
ashak மோடி மீது உள்ள கோவத்தை போக்க CAA ரத்து செய்துவிடலாமே
Rate this:
Share this comment
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
10-பிப்-202000:00:41 IST Report Abuse
pazhaniappan உண்மைதான் , பணமதிப்பிழப்பு , GST , போன்றவைகளோடு ஒப்பிடுகையில் CAA ஒரு பெரிய விஷயமில்லை . ஆனால், பணமதிப்பிழப்பு ,GST கொண்டுவரும்போது நீங்கள் என்ன கூறினீர்களோ அது நடக்கவில்லை , உண்மையில் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை , மனமதிப்பிழப்பு செய்த ஒரே வாரத்தில் சேகர் ரெட்டி வீட்டில் 120 கோடி புதிய நோட்டுகள் RBI யிலிருந்து எந்த வங்கிக்கும் செல்லாமல் நேரடியாக ரெட்டிக்கு வந்திருக்கிறது , அது அவர் கணக்கு கட்டிய பணமாக கூட இருக்கலாம் , சாதாரண மக்கள் 100 கும் 200 கும் அல்லல் பட்டபோது ரெட்டிக்கு மட்டும் அவ்வளவு பணம் எப்படி வந்தது , அதையே கண்டுபிடிக்க முடியாத உங்கள் மேல் எப்படி நம்பிக்கை வைக்க முடியும் . GST கொண்டுவந்தால் விலை வாசி குறையும் என்று சொன்னீர்கள் எங்காவது விலைவாசி குறைந்ததா , இல்லையே , நீங்கள் சொல்வது எதுவும் நம்பிக்கைக்கு உரியதாக இல்லையே , ஆகவே CAA விழும் என்ன நடக்குமோ என்ற பயம் , நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த , வேலை வாய்ப்பை பெருக்க , உற்பத்தி திறனை அதிகரிக்க உங்களால் ஏதாவது செய்ய முடிகிறதா அதை செய்ய முடியாததால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களிடம் குழப்பத்தை உண்டுபண்ணுகிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel
sri ram - chennai,இந்தியா
09-பிப்-202017:18:19 IST Report Abuse
sri ram Chowdikar Modikumar தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இந்தியா இந்து நாடாக இருந்தால் சிறுபான்மை என்று சொல்லி கொள்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். இந்தியா இஸ்லாம் நாடானால் சிறுபான்மை ஆக்கபடும் நாம் பாக்கிஸ்தானில் இந்துக்கள் படும் வேதனையை அனுபவிப்போம். தயவு செய்து செக்குலரிசம் பேசி நம் இந்து மதத்தை அழித்து விடாதீர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X