பொது செய்தி

தமிழ்நாடு

வேடசந்துார் அருகே 'நிலாப்பெண்' திருவிழா

Added : பிப் 09, 2020
Advertisement
 வேடசந்துார் அருகே 'நிலாப்பெண்' திருவிழா

வேடசந்துார் : வேடசந்துார் அருகே தேவிநாயக்கன்பட்டியில், 12 வயது சிறுமியை நிலாவுக்கு மனைவியாக பாவித்து கொண்டாடும் 'நிலாப்பெண்' திருவிழா நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே தேவிநாயக்கன்பட்டியில், தை மாத பவுர்ணமி நாளில், 'நிலாப்பெண்' எனும் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது.இவ்வூரில் உடல் நலம் குன்றிய, வயதுக்கு வராத இளம் பெண் ஒருவரை, தை மாத பவுர்ணமிக்கு 7 நாள் முன்பாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேர்வு செய்வர். அவர் 3 ஆண்டுகளுக்கு 'நிலாப் பெண்ணாக' அங்கீகரிக்கப்படுவார். அவர் நலம் பெறும் வகையில், அவருக்க தினமும் மாலையில், ஊரில் உள்ளோர் பால், பழம், கலவை சாதம் என சத்தான உணவை கோயிலில் வைத்து கொடுப்பர். உணவில் ஒரு பகுதியை எடுத்து, எண்ணெய் ஊற்றி தீபம் இட்டு, நிலாவுக்கு வைத்து வணங்குவர். எஞ்சியவற்றை குழந்தைகளுடன் பங்கிட்டு உண்பர்.


ஊர்வலம்


கடந்தாண்டு நிலாப்பெண்ணாக தேர்வான ரமேஷ் - நவமணி தம்பதியர் மகள் கனிஷ்கா 8, இரண்டாம் ஆண்டாக நேற்று இரவு 9:30 மணிக்கு மாசடச்சியம்மன் கோவிலில் இருந்து, சரளைமேடு எல்லைக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். கனிஷ்காவிற்கு ஆவாரம் பூக்களால் மாலையிட்டனர். ஆவாரம் பூக்கூடையை சுமக்கச்செய்து, மாரியம்மன் கோவிலுக்கு வந்து பாட்டுப்பாடி கும்மியடித்தனர்.


தாய்மாமன் குடில்


அங்குள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு, மீண்டும் மாசடச்சியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அச்சிறுமியின் தாய் மாமன்களால் உருவாக்கப்பட்ட தென்னங்கீற்று குடிசையில் உட்கார வைத்து, கும்மியடித்து பாடினர்.அதற்குள் நிலா மறைய துவங்கியதும், ஆவாரம் பூக்கூடையில் மண்சட்டியை வைத்து தீபம் ஏற்றினர். அதை அச்சிறுமி, கிணற்றில் விட்டார். அதன்பின் ஊர் மக்கள் சாமி தரிசனம் செய்து கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X