கிரெடிட் கார்டு விவரம் விற்பனை : 4.5 லட்சம் இந்தியருக்கு பாதிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

சிங்கப்பூர் : 'கிரெடிட் கார்டு, டெபிடிட் கார்டு' விபரங்கள் என, 4.5 லட்சம் இந்தியர்களின் விபரங்கள் விற்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த, 'குரூப் ஐ.பி.,' என்ற, சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பொருளாதார குற்றங்களைப் புரியும், 'ஜோகர்' என்ற இணையதளத்தில், சமீபத்தில், 4.6 லட்சம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதில், 98 சதவீதம், இந்தியாவைச் சேர்ந்த பிரபல வங்கிகள் வழங்கியவை. அதாவது, 4.5 லட்சம் கார்டுகள், இந்தியாவில் வழங்கப்பட்டவை.ஒரு கார்டு விபரம், 650 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த கார்டுகளின் மொத்த மதிப்பு, 30 கோடி ரூபாய் இருக்கும் என, தெரிகிறது.இந்த 4.5 லட்சம் பேரின் விபரங்கள் மூலம், அவர்களுடைய கார்டுகளில் உள்ள பணத்தை திருடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்களின் கார்டுகள் விபரம் திருடப்பட்டுள்ளது குறித்து, கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், இந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X