பிரிட்டன் குடியுரிமை கிடையாது : ஷமீமா 'அப்பீல்' மனு நிராகரிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

லண்டன் : ஐ.எஸ்., அமைப்பில் இணைந்ததால், தன் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்ததற்கு எதிராக, ஷமீமா பேகம், சிறப்பு குடிவரவு மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையிட்டார். அது, அவரின் 'அப்பீல்' மனுவை நிராகரித்தது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிறந்து, வளர்ந்த ஷமீமா பேகம், 20, என்ற இஸ்லாமிய பெண், 2015ம் ஆண்டில், லண்டனில் இருந்து வெளியேறினார். சிரியாவுக்கு சென்ற அவர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்தார். அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரை, பேகம் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பிறந்த, இரண்டு குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையால் உயிரிழந்தன.

இதையடுத்து, அங்கிருந்து மீட்கப்பட்ட அவர், அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டார். அவருக்கு, கடந்த ஆண்டு, ஒரு குழந்தை பிறந்தது. தன் குழந்தையுடன், லண்டனில் வாழ விரும்புவதாக அவர் கூறினார். ஆனால், அப்போதைய உள்துறை செயலர் சாஜித் ஜாவித், ஷமீமாவின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்து அறிவித்தார்.இதை எதிர்த்து, ஷமீமா பேகம் தரப்பு வழக்கறிஞர் டேனியல் பர்னர், எஸ்.ஐ.ஏ.சி., எனப்படும், சிறப்பு குடிவரவு மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையிட்டார். அது, ஷமீமாவின் மேல்முறையீட்டு மனுவை, நேற்று முன்தினம் நிராகரித்தது.

ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்த வழக்கு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒன்று. எனவே, ஷமீமா பேகமுக்கு குடியுரிமை வழங்க, உத்தரவு பிறப்பிக்க முடியாது. அவரின் தாய், வங்கதேசத்தை சேர்ந்தவர். எனவே, அவர் நாடற்றவராக கருதப்படமாட்டார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X