பொது செய்தி

இந்தியா

அழிவின் பிடியில் சிறுத்தைகள்: 90 சதவீதம் குறைந்தது எண்ணிக்கை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை, 90 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக, மரபணுசார் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள, வன உயிரின கல்வி மையம் (சி.டபிள்யூ.எஸ்.,) மற்றும் டேராடூனில் உள்ள, இந்திய வன உயிரின கல்வி நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ.,) ஆகியவை, இந்தியாவில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டன.சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான, மேற்குத் தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள் மற்றும் வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

இதில், சிறுத்தைகளின் கழிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு தொழில்நுட்பங்கள் மூலமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மரபணுசார் ஆய்வு முடிவில், கடந்த 120 முதல் 200 ஆண்டுகளில், இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை, 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 'இது மிகவும் கவலைக்குரியது. புலிகளைப் போல சிறுத்தைகளையும் பாதுகாக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.முற்றிலும் அழியும் நிலை

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்தினர் (டபிள்யூ.பி.எஸ்.ஐ.,) கூறுகையில், '-இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு சிறுத்தை, கிணறுகளில் சிக்கியோ, அடித்தோ, வாகனங்களில் அடிபட்டோ இறக்கின்றன. இந்தியாவில் கடந்த, 2018ம் ஆண்டு, 500 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன. 2019-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 218 சிறுத்தைகள் இறந்துள்ளன. 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019ல் இறப்பு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. புலிகளைவிட, சிறுத்தைகள் தான் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளன' என்றனர்.மோதலை தவிர்க்க வேண்டும்


விலங்கியல் வல்லுனர்கள் கூறியதாவது:சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் மனித - சிறுத்தை மோதலை தவிர்ப்பது முக்கியமானது. காட்டை ஒட்டிய கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளை சிறுத்தைகள் தாக்கினால், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்போது அவர்கள் சிறுத்தைகளைக் கொல்வதை தவிர்ப்பர்.கால்நடைகளைக் காக்க, வன உயிரினங்கள் நடமாடும் பகுதியில், மின்வேலி அமைப்பதையும் தடுக்க வேண்டும்.நாடு முழுவதும் சிறுத்தைகளைக் காக்க முழு அளவிலான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அவற்றை நாம் சந்ததியினர், புகைப்படங்களில் மட்டுமே காணும் அவலம் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
09-பிப்-202022:46:31 IST Report Abuse
Rangiem N Annamalai தோல் வர்த்தகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் .அதற்காக கொள்ள படுவது நிறுத்தப்படும் .
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-பிப்-202020:50:48 IST Report Abuse
 nicolethomson மனித விலங்குகளை செவ்வாய் கிரேக்கத்துக்கு அனுப்பினால் தான் இந்த பூமியில் மற்றைய உயிர்கள் வாழமுடியும்
Rate this:
Share this comment
Cancel
மலைக்கள்ளன் - கடமலைக்குண்டு,இந்தியா
09-பிப்-202019:41:38 IST Report Abuse
மலைக்கள்ளன்  ஆங்கிலேய துரைகளால் இயற்கையான காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டங்களை அழித்து மீண்டும் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களை மலைகளிலும் காடுகளிலும் இருந்து நாட்டுக்குள் இடம்மாற்றி அவரவர் தகுதிக்கேற்ப அரசு வேலை அல்லது தொழில் முனைவோராக அரசு வீடுகள் தரப்பட வேண்டும். காடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சாமியார் மடங்கள் கல்வி நிறுவனங்களை அரசு கைப்பற்றி அந்த இடங்களில் காடுகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதை செய்ய வில்லை என்றால் யானைகளையும் புலிகளையும் சிறுத்தைகளை நம் பேரபிள்ளைகளுக்கு புத்தகத்தில் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X