மாநில அரசு பணிகளில் இட ஒதுக்கீடு கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (40)
Advertisement
states, reservation, Quota, jobs, promotions, supremecourt, topCOurt, judge, நீதிபதிகள், இடஒதுக்கீடு, மாநிலங்கள், மாநிலஅரசுகள், உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட், பழங்குடியினர்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அரசு பணிகளில் பதவி உயர்வின் போது, இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில், உதவி பணியாளர் பணியிடத்தினை, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் நிரப்பும் முடிவிற்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோலின் கோன்ஸ்லேவ்ஸ் மற்றும் துஷ்யந்த் துவே ஆகியோர் வாதாடுகையில், பழங்குடியினருக்கு உதவ அரசியல் சட்டப்பிரிவு 16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய பிரிவின்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2012 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறை உதவி இன்ஜினியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு முறையை கைவிட 2012ல் அம்மாநில அரசு முடிவு செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உத்தர்காண்ட் ஐகோர்ட், பதவி உயர்வில் எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, அரசுக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து உத்தர்காண்ட் அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. அரசுப் பணி நியமனத்திலோ, அல்லது பதவி உயர்விலோ இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருவது தனிநபரின் அடிப்படை உரிமை அல்ல. இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையும் இல்லை; எனவே, இட ஒதுக்கீடு வழங்கும்படி மாநில அரசுக்கு கோர்ட் உத்தரவிட முடியாது'' என்று நீதிபதிகள், தீர்ப்பளித்தனர். 2012-ல் உத்தர்காண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். ''அரசு பணியில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என அரசு கருதினால் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கலாம் என, அரசியலமைப்பின் 16(4) மற்றும் 16(4-ஏ) சட்டப்பிரிவுகள் சொல்கின்றன; ஆனால், பணிநியமனம், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை பின்பற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் நீதிபதிகள் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் எல நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: பணி உயர்வின் போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை அல்ல. அப்படி இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு கட்டுப்பட வேண்டியதில்லை. பதவி உயர்வின் போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என எந்த ஒரு தனிநபரும் உரிமை கோர முடியாது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட முடியாது.

மாநில அரசு பணியில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என மாநிலங்கள் கருதினால் மட்டுமே, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய சட்டப்பிரிவுகள் அதிகாரம் கொடுக்கிறது. இதே போல், பதவி உயர்வின் போதும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதில் சந்தேகம் இல்லை.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதிலும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதிலும் வேண்டுமா அல்லது வழங்கக் கூடாதா என்பதை முடிவு செய்வதில் ஒரு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. அதேசமயம், மாநிலஅரசு இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற கடமையும் இல்லை. மாநில அரசு சமூகரீதியில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களி்ல் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு போதுமான பிரிதிநிதித்துவம் இல்லை என்று தெரியவந்தால், மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம். ஆனால், வேலைவாய்ப்பிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-பிப்-202023:23:44 IST Report Abuse
SURYANARAYANAN வேலைகள் எல்லாம் தனியார் மயம் ஜாதி ஒதிக்கிடுக்கு வேலேயில்லை.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-பிப்-202021:53:12 IST Report Abuse
S.Baliah Seer உச்ச நீதி மன்றம் இதே தீர்ப்பை மத்திய அரசு பணிகளுக்கு சொல்லுமா? தமிழ் நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. அப்படி என்றால் அது செல்லாதா?பின்னே மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்று இதே உச்ச நீதி மன்றம் சொல்லவில்லையா?கேட்டால் அது படிப்புக்கு இது வேலைக்கு என்பீர்களா ?UPSC குரூப் 1 தேர்வில் மட்டுமே இட ஒதுக்கீடு.ஆனால் அதற்குப்பின் அவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லை.இதே முறையை குரூப் B ,C ,D எல்லாவற்றிற்கும் கொண்டுவர உச்ச நீதி மன்றம் ஒத்துக்கொள்ளுமா?
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
09-பிப்-202020:22:44 IST Report Abuse
natarajan s முன்பெல்லாம், வருடா வருடம் increment வழங்க, ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு பின் 20 ( 5 )- 40 - ( 10) - EB (Efficiency Bar ) -60 (5 ) ...... என்று போட்டு இருப்பார்கள், அது இருந்தவரை சில நேரங்களில் உண்மையான திறமைசாலிகளும் சிலரால் பாதிக்க பட்டனர் பின்னர் அந்த முறை ஒருவரின் திறமையை அறிந்து அவர் increment வாங்க தகுதி நிர்ணயம் செய்வது விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு அரசு அலுவலகத்தில் தற்போதெல்லாம் பணி மூப்பு ( Seniority ) அடிப்படையில் reservation உள்பட பதவி உயர்வு வழங்குவதால் இதெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விட்டது.அரசியல் வாதிகளிடம் செல்வாக்கு மட்டுமே திறமை என்று ஆகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X