சார்ஸ் தாக்குதலை மிஞ்சியது கொரோனா உயிரிழப்பு

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 2003ல் பரவிய சார்ஸ் வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது.







கடந்த 2003ம் ஆண்டு, 24 நாடுகளில், 'சார்ஸ் வைரஸ்' எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய் தாக்கியதில், 774 பேர் உயிரிழந்தனர். தற்போது, கொரோனா வைரசால், சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் மட்டும், 780 பேர் உட்பட, 803 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், , 34 ஆயிரத்து 800 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.







சீனர் அல்லாத நபர்!


கொரோனாவால் உயிரிழந்தவர்களில், 802 பேர் சீனர்கள். ஹுபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் உள்ள, ஜின்யின்டன் மருத்துவமனையில், 60 வயதுள்ள, அமெரிக்கர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர்தான் கொரோனாவால் உயிரிழக்கும் முதல் சீனர் அல்லாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X