திருப்புமுனை ஏற்படுத்திய தேனி - சிலாகிக்கும் அப்புக்குட்டி| Dinamalar

திருப்புமுனை ஏற்படுத்திய தேனி - சிலாகிக்கும் அப்புக்குட்டி

Added : பிப் 09, 2020
Share
திரையில் சில காட்சிகளில் முகம் காட்டினாலே தோரணையில் உலா வரும் பலருக்கு மத்தியில் பரட்டை தலையோடு தேனிக்கு வந்து 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அப்புக்குட்டி. இப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...* உங்களை பற்றி...திருச்செந்துார் அருகே நாதன்கிணறு கிராமத்தை சேர்ந்தவன். என் பெயர்
திருப்புமுனை ஏற்படுத்திய தேனி - சிலாகிக்கும் அப்புக்குட்டி

திரையில் சில காட்சிகளில் முகம் காட்டினாலே தோரணையில் உலா வரும் பலருக்கு மத்தியில் பரட்டை தலையோடு தேனிக்கு வந்து 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அப்புக்குட்டி. இப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
* உங்களை பற்றி...திருச்செந்துார் அருகே நாதன்கிணறு கிராமத்தை சேர்ந்தவன். என் பெயர் சிவபாலன். 'அழகர்சாமியின் குதிரை 'படத்திற்கு பின் அப்புக்குட்டியாக மாற்றி விட்டனர். சென்னையில் ஓட்டலில் வேலை செய்தேன். அங்குதான் நடிக்கும் ஆசை துளிர்ந்தது. உதவி இயக்குனர் ஒருவர் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதை நம்பி அலைந்தேன். அவர் உதவவில்லை. மற்றொரு உதவி இயக்குனருடன் தங்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் உதவியால் முதலில் 'மறுமலர்ச்சி' படத்திலும், பின்னர் சிறு சிறு வேடங்களிலும் நடித்தேன்.
* இதுவரை நடித்துள்ள படங்கள்...75 படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் 25 படங்கள் பேசப்படுபவையாக அமைந்தன. அதில் 'கில்லி', 'அழகிய தமிழ்மகன்', 'ஒன்பது ரூபா நோட்டு' போன்ற படங்கள் மக்களிடம் அடையாளம் காட்டியது. 'வெண்ணிலா கபடிக்குழு' கிராமத்து வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருந்தது.
* தேசிய விருது பற்றி...தேனி மண் என் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. இம்மாவட்டத்தில் சூட்டிங் நடந்த 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் ஹீரோவாக நடித்தது தேசிய விருது பெற்று தந்தது. இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் சினிமாவாக நினைக்காமல் உணர்வுப்பூர்வமாக நடித்தேன். தேசிய விருதுக்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்தன. சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
* எந்த கேரக்டரில் நடிக்க ஆசை...நல்ல கதையம்சம் உள்ள கேரக்டர் எதுவாக இருந்தாலும் நடிப்பேன். சசிகுமார் படத்தில் வில்லனாக, 'வாழ்க விவசாயி' படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். சமூக சிந்தனையுள்ள 'கல்தா', 'அரசியல் பழகு' போன்ற படங்களும் வெளிவர உள்ளன. பரமகுரு, சசிகுமார் இயக்கத்தில் வித்தியாசமான கேரக்டர் ரோல், காமெடி கலந்த ஹீரோ கேரக்டரில் நடித்துள்ளேன்.
* காமெடி நடிகர்கள் பற்றி...ஒவ்வொருவரும் ஒருவகையில் சிறந்து விளங்குகின்றனர்.
* எந்த ஹீரோயினுடன் நடிக்க ஆசை...ஒரு அழகான ஹீரோயினுடன் நடிக்கணும்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X